Levi Spaulding
லேவி ஸ்பால்டிங்க்  1791 ஆம் ஆண்டு நியூ ஹாம்ப்ஷையர், அமெரிக்காவில் பிறந்தார். இவர் 1820 இல் இலங்கையில் 54 ஆண்டுகள் மறைப்பணியும் தமிழ்ப் பணியும் ஆற்றினார். யாழ்ப்பாணத்தில் உடுவில் பெண்கள் விடுதி பொறுப்பாளராக இருந்தார்; ஜோசஃப் நைட் என்பவர் உருவாக்கியிருந்த ஆங்கில-தமிழ் அகராதியை நிறைவுக்குக் கொணர்ந்து வெளியிட்டார் (விரிவாக்கிய இரண்டாம் பதிப்பு: 1852). Pilgrim's Progress என்னும் ஆங்கில இலக்கியத்தைத் தமிழில்மோட்சப் பிரயாணம்  என்ற தலைப்பில் வெளியிட்டார். தமிழ்க் கிறித்தவப் பாடல்கள் உருவாக்கினார். 1873 ஆம் ஆண்டில் இலங்கையில் இறைவன் திருவடி அடைந்தார்.