Louis Savenian Dupuis |
லூயி சவேனியான் துப்புயி 1806 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் பிறந்தார். 1832-1874 பாரிசு வெளிநாட்டு மறைப்பணி நிறுவனம்(Paris Foreign Missionary Society = Missions Etrangères de Paris) என்னும் அமைப்பின் கீழ் பணிபுரிய புதுச்சேரி வந்து, நாற்பத்திரண்டு ஆண்டுகள் பல ஊர்களில் தொண்டாற்றினார். "தமிழ்-பிராஞ்சு அகராதி" (Dictionnaire Tamoul-Français) மற்றும் "பிராஞ்சு-தமிழ் அகராதி" (Dictionnaire Français-Tamoul) உருவாக்கினார் (1850). இவற்றின் இரண்டாம் பதிப்பு முறையே 1895, 1911இல் வெளியாயின. லூயி மூஸ்ஸே (Louis Mousset) என்னும் மற்றொரு மறைப்பணியாளரோடு இணைந்து புதுவையில் மிஷன் அச்சகம் 1844 இல் தொடங்கி, தேம்பாவணி மற்றும் தமிழ் அகராதிகள் போன்ற நூல்களை அச்சேற்றி வெளியிட்டார். பெண்மக்கள் கல்வியை வளர்த்து மேம்படுத்த ஒரு தனித் துறவற சபை உருவாக்கினார். "பூமிசாஸ்திர சங்க்ஷேபம்" போன்ற கல்விநூல்கள் வெளியிட்டார். |