மிரோன் வின்சுலோhttp://tawp.in/r/1kjr

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து 


மிரோன் வின்சுலோ, அமெரிக்காவிலுள்ள வெர்மான்ட் மாநிலத்தில் வில்லிஸ்டன் என்ற ஊரில் திசம்பர் 1, 1789 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஒரு கிறித்தவச் சமயபோதகர்.


இவர் தொகுத்த தமிழ் ஆங்கில விரிவான அகராதி (A Comprehensive Tamil and English Dictionary) 68,000 சொற்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அருள்திரு ஜோசப் நைட் பிரபுவின் மூல நகலை அடிப்படையாக வைத்து இருபது ஆண்டுகள், தினமும் மூன்று மணிநேர வீத, உழைப்பில் 1862 ஆம் ஆண்டு இதை வின்சுலோ வெளியிட்டார். இப்பெரும் பணியைத் தவிர வின்சுலோ பல நூல்களை எழுதியுள்ளார்.