வீரமாமுனிவர் செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்http://tawp.in/r/25dm
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீரமாமுனிவர் செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்னும் கட்டுரை கொஸ்தான்சோ ஜுசேப்பே பெஸ்கி (Costanzo Giuseppe Beschi) (1680-1747) என்னும் இயற்பெயரும் வீரமாமுனிவர் என்னும் சிறப்புப் பெயரும் கொண்ட தமிழறிஞர் ஒருசில தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்தி அமைத்த வரலாற்றை எடுத்துரைக்கிறது. வீரமாமுனிவர் தமிழகத்தில் 1710இலிருந்து 1747 வரை மறைப்பணியும் தமிழ்ப்பணியும் ஆற்றினார். தலைசிறந்த தமிழறிஞரான அவர் இலக்கணம், இலக்கியம், அகராதி, சிறுகதை போன்ற பல துறைகளில் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களித்தார். தமிழுக்கு அவர் ஆற்றிய ஒரு சீரிய பணி தமிழ் எழுத்துக்களில் அவர் கொணர்ந்த சீர்திருத்தம் ஆகும்.
உயிரெழுத்துச் சீர்திருத்தம்
எகரத்தையும் ஏகாரத்தையும் வேறுபடுத்தல்
ஒகரத்தையும் ஓகாராத்தையும் வேறுபடுத்தல்
உயிர்மெய்யெழுத்துச் சீர்திருத்தம்
எகர ஏகார உயிர்மெய் வேறுபடுத்தல்
ஒகர ஓகார உயிர்மெய் வேறுபடுத்தல்
உயிர்மெய்யெழுத்தில் ஆகாரத்தையும் ஓகாரத்தையும் சுட்டும் காலை ரகத்திலிருந்து வேறுபடுத்தல்
பயன்
உயிரெழுத்திலும் உயிர்மெய்யெழுத்திலும் வீரமாமுனிவர் கொணர்ந்த எகர ஒகர சீர்திருத்தத்தை ஆட்சியாளரும், அச்சகத்தாரும், அச்சடித்தோரும் ஏற்று நடைமுறைக்குக் கொண்டு வந்ததால் அச்சீர்திருத்தம் இன்றும் நிலைபெற்று, அனைவரும் மேற்கொள்ளும் வழக்கமாக வந்துவிட்டது.
தாம் செய்த எழுத்துச் சீர்திருத்தம் பற்றி வீரமாமுனிவரே தமது தமிழ்-இலத்தீன் அகராதியின் (1744) முன்னுரையில் 15ஆம் பத்தியில் விளக்கியுள்ளார்.
வீரமாமுனிவர் செய்த எழுத்துச் சீர்திருத்தத்தின் சிறப்பை ச. இராசமாணிக்கம் கீழ்வருமாறு விவரிக்கிறார்:
| “ | தொல்காப்பியர் காலத்திலிருந்து தமிழ் எழுத்துக்களை எவராலும் மாற்ற முடியவில்லை...வெளிநாட்டில் பிறந்து, ஏலாக்குறிச்சி என்ற சிற்றூரில் பாமர மக்களிடையே பணிபுரிந்த வீரமாமுனிவர், இத்தகைய சீர்திருத்தத்தைச் செய்து நடைமுறைக்குக் கொண்டு வந்தது, செயற்கரிய செயலாகும்...வேறொன்றும் செய்யாமல், இஃது ஒன்றை மட்டும் செய்திருந்தாலே, அவருக்குத் தமிழில் சிறந்த இடம் கிடைத்திருக்கும். |